குறள் முழக்கம் – மின்மடல் 01

உலகத் திருக்குறள் இணையக்கல்விக்கழகம் வெளியிடும் செய்திமடல் – திங்கள்தோறும் பத்தாம்நாள் வெளிவருகின்றது.

இன்று முதல் திங்கள்தோறும் பத்தாம் நாள் உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகத்தினால் வெளிவருமிந்த செய்திமடல் உங்களுக்கானது.நீங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் பகுதியில் நிகழும் குறள் தொடர்பான நிகழ்ச்சிகளை எங்களுக்கு எழுதியனுப்புங்கள்.வழமையான ஒருங்குறி (யூனிகோடு) அச்சுருக்களைப் பயன்படுத்தி சொல் கோப்புகளாக (MS Word) anjal@kuralvirtual.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்புங்கள்.படங்கள் இருப்பின் அவற்றையும் தனியே படக்கோப்புகளாக அனுப்புங்கள்.

குறளைப்  பரப்பும் பணியில் முனைந்துள்ள அமைப்புகளையும் சான்றோர்களையும் பற்றி எமக்குத் தெரிவியுங்கள். அவ்விவரங்கள் வெளிவந்தால் குறள்பரப்பும் பணிக்கு அறிந்தேற்பு வழங்கிய நிறைவு நம் அனைவருக்குமே ஏற்படும் அன்றோ?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது