குறள் நெறி – மின்னிதழ் – முன்னோட்ட பதிப்பு

குறள்நெறி மலர் 1 | தை 1-15, தி.பி.2052 | முன்னோட்டம்

12 thoughts on “குறள் நெறி – மின்னிதழ் – முன்னோட்ட பதிப்பு

  1. முனைவர் பெ.வெற்றிநிலவன்

    மிகச் சிறப்பான ஆக்கம். ஊக்கமளிக்கிறது. உலகத் தமிழர்கள் குறள் நெறியை கண்ணுற்று கருத்தளிக்க வேண்டுகின்றோம்…

    Reply
  2. முனைவர் வெற்றி திருநாவுக்கரசு

    நல்ல பணி வரவேற்கத்தக்கது

    Reply
  3. செ.மன்னர்மன்னன்

    ஈராயிரம் ஆண்டாய் தமிழர் அறத்தின் அகமாகவும் முகமாகவும் இலங்குகின்ற திருக்குறள் எனும் வாழ்வியல் ஒழுகு நாண். அந்த பெருமைமிகு அறநூலின் கருத்துப்பரவலை முகாமை நோக்காகக்கொண்டு தொடங்கப்பட்டிருக்கும் உலகத் திருக்குறள் இணையக்கல்விக் கழத்தின் அறிவுச்சுடராக வெளிவந்திருக்கும் “குறள்நெறி”மிகவும் சீர்மையும் நேர்மையும் மிக்க மின்னிதழாக உலகெங்கும் வாழும் உறவுகளின் பார்வைக்கு தரப்பட்டிருக்கிறது. மிகக்குறுகிய கால அளவில் வெளிவந்திருக்கும் இவ்விதழ் குறளாசான் திருவள்ளுவரின் கருத்தையும் மொழிப்போர் போராளி பேராசிரிய பெருந்தகை இலக்குவனார் எண்ணங்களையும் தாங்கி வந்திருப்பது பெருஞ்சிறப்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். நன்றி.
    – அன்புடன்
    செ.மன்னர்மன்னன்.

    Reply
  4. சுபா அருணாசலம்

    அடையாளங்களை பறிக்க நினைக்கும் , அழிக்க நினைக்கும் , நம் இனத்தை ஒடுக்க நினைக்கும் எதிரிகளுக்கு அமைதியான முறையில், அற வழியில் போர் பயிற்சி தரும் பாசரையாக விளங்கப் போகிறது இந்த மெய்நிகர் பல்கலைக்கழகம் என்பதில் ஐயம் இல்லை. இந்த மகத்தான பணிக்காக உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் வணக்கம்.

    Reply
  5. சொ.செ.இளங்கோவன்.

    குறள் நெறி ஓங்கட்டும் தொடர்ந்து இயங்குவோம்.

    Reply
  6. திண்டுக்கல் தனபாலன்

    திருக்குறளில் எண்கள்… குறள்களில் வரும் எண்களை பற்றிய முழு தகவலும், இணையத்திலும் உள்ளது… பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும் ஆய்வின் படி, “முப்பால் எண்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்பதற்கான தரவுகள் தங்களிடம் இருந்தால் தெரிவிக்கவும்… நன்றி ஐயா…

    392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

    Reply
  7. திண்டுக்கல் தனபாலன்

    அடியேனின் ஆய்விற்கு முன்பாக எழுதிய சில பதிவுகள் தங்களின் கவனத்திற்கு :
    https://dindiguldhanabalan.blogspot.com/2020/10/Thirukkural-SEVEN.html
    https://dindiguldhanabalan.blogspot.com/2020/10/Thirukkural-SEVEN-Game.html
    https://dindiguldhanabalan.blogspot.com/2020/11/Hornless-End-Part.html
    https://dindiguldhanabalan.blogspot.com/2020/11/kauvai.html
    https://dindiguldhanabalan.blogspot.com/2021/01/Thirukkural-exploration-Part-1.html

    Reply
  8. செ. மணிமேகலை

    வான் போற்றும் வள்ளுவர் பெருமான் தமிழுலகுக்குத் தந்த மாபெரும் கொடை, திருக்குறள். மானிடர்க்கு எல்லா வகையிலும் எக்காலத்தும் எந்த இடத்திலும் பொருந்தும்படியான நெறிகளைத் தெளிவாகவும் மிகச் சிறப்பாகவும் கூறிடும் திருக்குறளின் சிறப்பைப் போற்றிடவும், அதிலுள்ள அறிவுரைகளையும் அறிவார்ந்த கருத்துகளையும் பாரெங்கும் பரப்பிடத் துவக்கப்பட்டுள்ள உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் ‘ குறள் நெறி,’
    மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது.
    இந்தப் போற்றத் தக்க அரும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மறைமலை அவர்களையும் பிற தமிழ்ச் சான்றோர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்.
    அன்புடன்,
    முனைவர் மணிமேகலை புஷ்பராஜ்

    Reply
  9. நீலகண்ட தமிழன்

    அய்யாவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. குறள்நெறி மின்னிதழ் மென்மேலும் சிறப்புற்று விளங்கிட வேண்டும். அய்யாவின் தமிழ்ப் பணிக்குத் தலை வணங்குகிறேன்.
    நீலகண்ட தமிழன் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா

    Reply
  10. க.சிவஞானசம்மந்தம்

    உலக பொது மறை மேன் மேலும் சிறக்கவும் மக்களை நீதிநெறியுடனும், அறத்துடனும்,நல்வழிப்படுத்த அருமையான பாடல் வழியாக மக்களுக்கு எடுத்து சென்னைக்கு நன்றி🙏 வாழ்த்துகள் பல

    Reply
  11. க.சிவஞானசம்மந்தம்

    உலக பொது மறை மேன் மேலும் சிறக்கவும் மக்களை நீதிநெறியுடனும், அறத்துடனும்,நல்வழிப்படுத்த அருமையான பாடல் வழியாக மக்களுக்கு எடுத்து சென்றமைக்கு நன்றி🙏 வாழ்த்துகள் பல

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது